அமைச்சர்கள் தென்னாபிரிக்கா நோக்கிபயணம்

இலங்கையின் நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை தென்னாபிரிக்கா நோக்கி பயணித்துள்ளது.

இலங்கையில் நிறுவப்படவுள்ள “உண்மை கண்டறியும் ஆணைக்குழு” பணிகள் முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தன்மை குறித்து தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அனுபவத்தைப் பெறுவதற்காகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்