இறக்குமதி தடைகள் நீக்கப்படவேண்டும்

இறக்குமதி தடைகள் நீக்கப்படவேண்டும் – IMF இற்கான இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் தூதுவர்.

தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதனை அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.

Dailymirror  எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த IMF இன் இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் பகுதிக்கான தூதுவ தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்தார்.

அண்மையில் இலங்கை சில இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், அந்நிய செலாவணி மாற்றத்திற்கான விதிகள் மற்றும் சில இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களின் மீதான தடைகள் இன்னும் உள்ளன என்றார்.