சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் பலி

பசறை – மொனராகலை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பசறை – மொனராகலை பிரதான வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டை பகுதியில் உள்ள தொழிந்சாலைக்கு முன்னால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தந்தை ஒருவரும் மகனும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த வேளை சிறிய பட்டா ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை பலத்த காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.