நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்