ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

 

அமெரிக்க டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று 332.81 ரூபாவாகவும், இன்று 320.27 ரூபாவாகவும் காணப்படுகின்றது. விற்பனை பெறுமதி நேற்று 356 ரூபாவாகவும் இன்று 343 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று 331.48 ரூபாவாகவும், இன்று 314 ரூபாவாகவும் காணப்படுகின்றது. விற்பனை பெறுமதி நேற்று 350.00 ரூபாவாகவும், இன்று 336 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

சம்பத் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 315 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 330 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.