Last updated on April 28th, 2023 at 05:12 pm

பரீட்சை எழுதிய மாணவி எடுத்த தவறான முடிவு

பரீட்சை எழுதிய மாணவி எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்-

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார்.

அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.