திருகோணமலையில் முதல் தடவையாக ஆழ் கடலில் கழிவுகளை அகற்றும் திட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் முதல் தடவையாக ஆழ் கடலில் கழிவுகளை அகற்றும் திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகளவில் பிரசித்தி பெற்ற திருகோணமலை நகர கடல் பகுதியில் ரிங்கோ ஏஐடி இன் ஏற்பாட்டில் யனா பௌண்டேசன் (சுவிம்மிங் அக்கடமி) இல் பங்குபற்றிய நீச்சல், சுழியோடி மாணவர்களின் ஒத்துழைப்புடன் லயன்ஸ் கிளப் ஒஃப் சென்டினியல் பரயடிஸ் ரிங்கோமலி ஆதரவுடனும் UN SDG2030 இன் 14 வது இலக்கான “லைப் பிலோ வோட்டர்” இற்கு அமைய இத்திட்டம் சிறந்த முறையில் அமுல் படுத்தப்பட்டது.
இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக திருமதி. தயாளினி ஹரிகரன் (ரிங்கோ ஏஐடி பணிப்பாளர்), திரு. நந்தன விஜயலால் (யனா பௌண்டேசன் பணிப்பாளர்), Dr. கிருஷாந்தன், திரு.ஜெயசீலன் (புளு வோட்டர் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர்) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இத் திட்டத்தினை ரிங்கோ ஏஐடி இன் நிறுவனர் திரு. இராஜகோன் ஹரிஹரன், ரிங்கோ ஏஐடி இன் நிகழ்ச்சி முகாமையாளர் திரு. சங்கரலிங்கம் நவநீதன் முன்னின்று வழிநடத்தினார். மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் இத் செயல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டத்து.
இத் திட்டத்தினால் ஆழ் கடலில் இருந்து பல விதமான கழிவுகள் அகற்றப்பட்டது உதாரணமாக பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், மதுபான போத்தல்கள், இருப்புகள், கத்திகள் என பல காணப்பட்டது. அத்தோடு கடற்கரை பகுதியும் சுத்தப்படுத்தப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்