
வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரம் திறந்து வைப்பு
-யாழ் நிருபர்-
வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரம் திறப்பு
யாழ். நல்லூர் பிரதேச சபையினால் முன்மொழியப்பட்ட தூயநகரம் துரித அபிவிருத்தித்திட்டம் என்னும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துயிருந்தனர்.
அந்தவகையில் குறித்த பணியின் ஒரு அங்கமாக திருநெல்வேலிசந்தைக்கு அருகாமையில் உள்ள வடக்கு மூலைப்பகுதியில் அமைக்கப்பட்ட வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரத்தினை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
நல்லூர் திருநெல்வேலி வர்த்தகச்சங்கத்தலைவர் சுரேஷ் அன்பழகன் மற்றும் வர்த்தக நிர்வாக சங்க உறுப்பினர்களாக.விநோதன் வ.அனந்தன், ம.வைத்தியவரன் ஆகியோர்களின் முழுமையான நிதிபங்களிப்பின் மூலமாக வண்ணமயமாக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுர இணைந்த அலங்காரத்தினை திறந்துவைத்தனர்.
இதில் வர்த்தகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டனர்.
மக்களை கவரும் வகையில் வானவேடிக்கைகளும் இடம்பெற்றுயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


