
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் செல்வராசா தலைமையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் சிறிதரன், பட்டிருப்பு கல்வி வலய உயர் அதிகாரிகள், சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், தீர்ப்பாளர்கள், ஆரம்பிப்பாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதில் முதல் நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் நிகழ்வு, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், கொடியேற்றம், தேசிய பாடசாலை கீதம் சத்தியபிரமாணம், வரவேற்புரை, தலைமையுரை (பாடசாலை அதிபர்), போட்டி நிகழ்வுகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தல், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, பிரதம அதிதி உரை, பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான ஓட்ட நிகழ்வுகள், வெற்றிக்கேடயங்கள், பரிசுப்பொருட்கள், சான்றிதழ்கள் வழங்குதல், நன்றியுரை, தமிழ்மொழி வாழ்த்து பாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது முதலாம் இடத்தை கம்பர் இல்லமும், இரண்டாம் இடத்தை இளங்கோ இல்லமும், மூன்றாம் இடத்தை வள்ளுவர் இல்லமும் பெற்றன.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

