கலால் திணைக்களத்தின் அறிக்கைகளின் படி, இலங்கையில் மது வரி வருமானம் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 350 கோடி ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, 2022 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மது வரி வருமானம் 2,860 கோடி ரூபாவாக இருந்த கலால் வருவாய் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 2,510 கோடி ரூபாவாக குறைந்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு இதுவரை கலால் வருவாய் 12.2 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்