
சிறுமியை பாடசாலைக்கு செல்லும் வழியில் அழைத்துச்சென்ற நபர் கைது
சிறுமியை பாடசாலைக்கு செல்லும் வழியில் அழைத்துச்சென்ற நபர் கைது
மல்லாகம் பகுதியச் சேர்ந்த 14 வயது சிறுமியை அழைத்து சென்ற 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி பாடசாலைக்கு செல்ல முற்பட்ட போது சிறுமியை அழைத்துக் கொண்டு குறித்த இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரினால் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இம் முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயபாலா தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டவுடன் இளைஞனை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
