யாழ் மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழ் மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது

வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த இருவரை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணையை அடுத்து மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்களை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் வாளினை தயாரித்த அதன் உரிமையாளரை கைது செய்ததுடன் குறித்த நபரிடம் இருந்து வாளொன்றை கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை பட்டறை உரிமையாளருக்கு உடந்தையாக செயற்பட்ட இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்திய உந்துருளிகளை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் விற்ற ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு உந்துருளிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்