
வாகன விபத்தல் ஒருவர் பலி
வாகன விபத்தல் ஒருவர் பலி
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி இவ்வாறு உயிரிழந்தார்.
ஊர்காவற்றுறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம் குறிகாட்டுவானிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாரால் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல்கள்கிடைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
