இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல், மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்