
கொழும்பு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 40 வயதுடைய முச்சக்கரவண்டி திருத்தினரே படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
