
நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம்
மகேசன் விளையாட்டுக்கழகத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம்,
கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம் நடைபெற்றது.
குறித்த பயணம் காலை 9:00 மணியளவில் கரவெட்டி அம்பன் மருத்துவமனை முன்றலிலிருந்து ஆரம்பித்து சரசாலை வீதி ஊடக மந்திகை சந்தி பருத்தித்திறை யாழ்ப்பாணம் வீதி ஊடாக மகேசன் விளையாட்டு மைதானத்தை சென்று நிறைவடைந்தது.
இதில் மகேசன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
