வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி

தேசிய அழகுகலை மன்றமும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்த எற்பாட்டில் 2023ம் ஆண்டுக்கான வடமாகாண மகளிர் அழகுராணிபோட்டி தேர்வு நிகழ்வு இன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கையின் தேசிய அழகுகலையின் நிபுணரும், பணிப்பாளரும் ஆகிய எஸ்.டி.சதுனி சேனவாயகே கலந்து கொண்டு அழகுராணிப்போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

இவ் அழகுராணிப் போட்டியானது யாழ். மாவட்டத்தில் முதல் தடவையாக இடம்பெறுகின்ற போட்டியாக காணப்படுவதுடன் 25 மகளிர்களுக்கான தேர்வுப் போட்டி இடம்பெறும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டபோதிலும்13 மகளிர்கள் மட்டும் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இதன் இரண்டாவது சுற்றுக்கான தேர்வு வருகின்ற சனிக்கிழமை (25) அன்று நடாத்துவதற்கு அழகுராணிக்கான நடுவர்கள் குழாம் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.

இதில் 20 வயது தொடக்கம் 22 வயது நிரம்பிய மகளிர் பங்குபற்றினர்.

இவ் நிகழ்வில் இலங்கை தேசிய அழகுகலை நிறுவனத்தின் தவிசாளர் மாதாவ வத்தேகேமே,மற்றும் நிகழ்ச்சி எற்பாட்டாளர் அர்ஜூன் ஸ்ரீரஞ்சன்,மற்றும் யாழ். பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியாளர்கள், போட்டியில் கலந்து கொண்டோரின் குடும்ப உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்