
இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா
இலங்கையில் சவாலான காலங்களில் தங்களுக்கு உதவிய இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
நீரைக்காட்டிலும் இரத்தம் அடர்த்தியானது என்பதை சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையுடன் இந்தியா இவ்வாறான உறவையே கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் சவாலான காலத்தை கடந்துவந்த போது யார் உண்மையான நண்பர் என்பதை இலங்கை அறிந்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
