நீதிபதியின் முன்னால் வைத்து காதலியை கன்னத்தில் அறைந்த இளைஞன்

நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது  நீதிபதியின் முன்பாக முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் – மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.