
பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும்
பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும்
தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நேற்று வியாழக்கிழமையும் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
அதேநேரம், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் பங்கேற்பதைத் தவிர்ப்பதாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது மேலும் 22 நாட்கள் தாமதமாகுவதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
