
பொலிஸ் மா அதிபராக: தேசபந்து தென்னகோன்
பொலிஸ் மா அதிபராக: தேசபந்து தென்னகோன்
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இதை அறிவித்தார்.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற மட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
