
பணிப்புறக்கணிப்பால் இ.போ.சவுக்கு 90 இலட்சம் ரூபா நட்டம்
பணிப்புறக்கணிப்பால் இ.போ.சவுக்கு 90 இலட்சம் ரூபா நட்டம்
இலங்கையில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, நேற்றைய தினம் புதன் கிழமை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, 90 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த வருமான இழப்புக்கு பணிப்புறக்கணிப்பு காரணமாக, மக்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே செல்லாமையே காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நேற்றைய தினம் புதன் கிழமை தனியார் பேருந்துகளின் வருமானம், 15 முதல் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
