
பூரு மூனாவுக்கு வெளிநாடு செல்ல தடை
பூரு மூனாவுக்கு வெளிநாடு செல்ல தடை
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற நிலையில் தேடப்படும் குற்றக் குழு உறுப்பினர் ‘பூரு மூனா’ என்றழைக்கப்படும் ரவிந்து சங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் இரண்டு பௌத்த பிக்குகளின் உதவியுடன் பொலிஸாரிடமிருந்து இருந்து தப்பிச்சென்றார்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது, ஹங்வெல்ல உணவக உரிமையாளரின் கொலைக்குப் பின்னர், பண்டாரகம, மில்லனிய, மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தஞ்சமடைந்ததாக, பூரு மூனா வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது வாக்குமுலத்தை அடிப்படையாகக்கொண்டு, அவருக்கு உதவியமைக்காக, இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவரும் அவரது மனைவியும் ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
