
பங்காளதேஷில் தீ விபத்து : நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீக்கிரை
பங்காளதேஷில் தீ விபத்து : நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீக்கிரை
பங்காளதேஷில் தலைநகரான டாக்காவில் உள்ள குனிபாரா பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்காணன குடிசைகள் எரிந்து சாம்பலானது.
குனிபாரா பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாக அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடிய பின்னர் இந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 100 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. பலரது உடைமைகள், மின்சாதனங்கள் இதில் கருகி சேதம் அடைந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
