
நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் பங்கேற்காது
நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் பங்கேற்காது
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பேருந்து ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நாளைய தினம் புதன்கிழமை பொதுமக்களின் பயண நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
அந்த சேவைகளை நடத்துவதற்கு போதிய பேருந்துகள் இல்லை என்றால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
