
மேல் மாகாணத்தில் பரீட்சைகள் ஒத்திவைப்பு
மேல் மாகாணத்தில் நாளை புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சில தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தரம் 9, 10,மற்றும் 11ம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் புதன்கிழமை ஆசிரியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் நிலையில்இ இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்,