இன்றைய நாள் உங்களுக்கு
மேஷ ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் பொறுமை காக்க வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் இணைத்துப் பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் உங்களுக்கு பல நன்மைகள் கிட்டும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
மிதுன ராசிக்காரர்களே:
இன்று நீங்கள் தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
கடக ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் நீங்கள் பல புதுமைகள் படைப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களே :
இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிறு வயது நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
கன்னி ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் வெற்றிக்கு வித்திடுவீர்கள். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
துலா ராசிக்காரர்களே :
இன்று உங்களுக்கு புத்துணர்ச்சி பெருகும் நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் இன்றைய நாளில் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
விருச்சிக ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் நீங்கள் பதற்றப்படாமல் பக்குவமாக செயல்பட்டால் நன்மை உண்டாகும். ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது.
தனுசு ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் நீங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பத்தைப் பற்றிய சில கவலைகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரப்படும். வியாபாரத்தில் கடன்களை நயமாகப் வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம்.
மகர ராசிக்காரர்களே :
இன்றைய நாள் உங்களுக்கு இனிமையானதாக அமையும. குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த – பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
கும்ப ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் புகழ், கௌரவம், உயரும். உங்களின் அணுகுமுறைகளை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீன ராசிக்காரர்களே :
இன்றைய நாளில் புதிய பல முயற்சிகள் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்
இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய எல்லாவற்றுக்கும் பொதுவான இறைவனை வணங்கி இன்றைய நாளை சிறப்பாக அமைத்துக் கொள்வோம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்