Last updated on April 28th, 2023 at 05:12 pm

சாதாரண தரப் பரீட்சை – கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை – கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2022 உயர் தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தினால் அடுத்த முறைக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

உலகளாவிய தொற்றுநோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் கல்வியைப் பாதிக்கும் போராட்டங்களுக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி -சங் கும் கலந்துகொண்டார்.