
யாழில் 126 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
யாழில் 126 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
யாழ்ப்பாணம் மதகல் கடற்கரைப் பகுதியில் ரூபா 41 மில்லியன் பெறுமதியான 126 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
வடக்கு கடற்படைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கடலோரப் பகுதியில் மேற்கொண்ட ரோந்துச் நடவடிக்கையின் போது , 55 பொதிகளில் இந்த கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ள நிலையில், கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சாவை இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
