வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முருகன்  எனும் தங்க நகை ஒட்டும் வியாபாரியே விபத்தில் உயிரிழந்தார்.

குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு உணவு எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வடி ரக வாகனம் மோதி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

விபத்தில் மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வடி ரக சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hமேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்