இரு குழுக்களிடையே மோதல் : ஒருவர் உயிரிழப்பு

கண்டி – தவுலகல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த 32 வயதான குறித்த நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.