மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மீட்கப்பட்ட சிசு : தாயும் தந்தையும் கைது

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த மீனகயா ரயில் மலசலக்கூடத்தில், கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த சிசு நேற்று இரவு மீட்கப்பட்டது.

பின்னர் குறித்த குழந்தை ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், குறித்த குழந்தையின் 25 வயதான தாய் பண்டாரவளை பகுதியிலும்,  26 வயதான தந்தை கொஸ்லந்தை பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.