பாவித்த கொமோட்டை திருடியவருக்கு மூன்று வருட சிறை

 

கழிவறை கொமோட் ஒன்றைத் திருடியமைக்கும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 3,000 ரூபா அபராதமும் காலி பிரதான நீதவான் இசுரு நெட்டிகுமாரவினால் வழங்கப்பட்டது.

இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியமைக்காக சந்தேகநபருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்கம பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட கொமோட்டை, வேறு இடத்தில் பொருத்துவதற்காக கழற்றப்பட்ட நிலையில்  சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.