திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த சோகம்..!

அடுக்குமாடி கட்டத்தின் 20ஆவது மாடியில் இருந்து முன்னணி தொழிலதிபர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஓயோ நிறுவனத்தின் இளம் தொழிலதிபரும் நிறுவனருமான 29 வயதான ரிதேஷ் அகர்வால் இந்தியாவின் இளம் பெரும் கோடீஸ்வரராவார். தங்கும் விடுதிகளை வாடகைக்கு விடும் பிரபல நிறுவனமான ஓயோ- வின் நிறுவனரான இவர், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார். 2013ல் தனது 19வது வயதில் ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் தனது அபார வணிக யுக்தியால் குறுகிய காலத்தில் வெகு விரைவான வளர்ச்சியை கண்டார்.

இவருக்கும் கீதன்ஷா சூட் என்பவருக்கும் கடந்த மார்ச் 7ம் திகதி டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணம் முடிந்த 3ம் நாள் நண்பகல் 1 மணி அளவில் குருகிராமில் உள்ள DLFs The Crest society அடுக்குமாடி குடியிருப்பின் 20ஆவது மாடியில் இருந்து விழுந்து தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தற்கொலை மரணமாக இருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தனது தந்தையின் மறைவு குடும்பத்திற்கு பேரிழப்பு என இவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தந்தையின் இழப்பிற்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது தந்தை  உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்