ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி

மெட்டா நிறுவனமானது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய சமூக வலைத்தளங்களை இயக்குகிறது. இதில் பணிபுரியும் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களாகவே முதன்மையாக இயங்கிவரும் பல நிறுவனங்கள் பணியாட்களைகுறைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். எலான் மஸ்கில் டிவிட்டர் நிறுவனம் தொடங்கி இந்தியாவின் பைஜீஸ் நிறுவனம் வரை பலர் அதிரடியாக அவர்களின் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த வரிசையில் மெட்டா நிறுவனம் சுமார் 11இ000 ஊழியர்களைக் கடந்த நவம்பர் மாதம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது.

அதே போன்று மீண்டும் பல ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் மெட்டா ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.

மெட்டா நிறுவன தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் மெய்நிகர் கருவியான மெட்டாவேர்ஸ் மேல் கவனம் செலுத்தவும்இ . இதனால் அவர்களுக்குத் தேவையான ஊழியர்கள் மட்டும் வைத்துக்கொண்டு இதர ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்