தேவாலயத்தில் 7 பேர் சுட்டுக் கொலை

ஜெர்மனியின் வடக்கு ஹாம்பர்க் நகரத்தில் இருக்கும் தேவாலயத்தின் மூன்று அடுக்குமாடி கட்டிடத்தின் ஒருபகுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள்இ அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் அங்கிருந்தவர்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த கட்டிடத்தில் இருந்த மக்களை பத்திரமாக மீட்டனர்.

அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், அதிரடிப்படை வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது. துப்பாக்கிச் சூடு கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடங்கியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்