
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது ஆட்டநேர முடிவில், மைக்கேல் பிரேஸ்வெல் 9 ஓட்டங்களுடனும் டேரில் மிட்செல் 40 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் 355 என்ற முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி, 193 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள நியூஸிலாந்து அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
