
அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கின் அம்பாறை பகுதிகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
