இலங்கையில் முக்கிய இரண்டு இணையதளங்கள் மீது ஊடுருவல்

ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கடந்த வாரம் இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய தகவல்கள் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்ததளங்களின் புலனாய்வு தளமான போல்க்கன்பீட்ஸ் தெரிவிக்கையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் தளங்களே தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த இணையத்தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 02ம் திகதியன்று இடம்பெற்றதாக போல்க்கன் பீட்ஸ்(FalconFeeds.io.) குறிப்பிட்டுள்ளது. இதற்கு முகவர்களாக கெல்வின் செக்கியுரீட்டி என்ற பெயரை அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

அந்த இணையத்தளங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறித்த இணையத்தில் ஊடுருவலாளர்கள் பதிவை பிரசுரித்திருந்தனர்.

கெல்வின் செக்கியுரீட்டி என்ற பெயரில் கொலம்பியா, மெக்சிக்கோ மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அடிக்கடி இணையத்தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக இணையதளத்தின் புலனாய்வு துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேனல் நளின் ஹேரத் இதனை மறுத்துள்ளார். இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகப்போவதாக எச்சரிக்கப்பட்ட போதிலும், தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இணையத்தள தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்க மேலும் முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த தினத்தில் தமது இணையத்தின் மீது தாக்குதல்கள் எதுவம் இடம்பெறவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவரும் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்