400 அமெரிக்க டொலர்கள் கிரெடிட் கார்டில் திருட்டு

400 அமெரிக்க டொலர்கள் கிரெடிட் கார்டில் திருட்டு

 

மேற்படி கிரெடிட் கார்டில் சுமார் 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிற்கு நேற்று பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டை காணாமல் போனமை தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி கோட்டேயிலுள்ள வீட்டில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேளையில் தனது கடன் அட்டை காணாமல் போனதாக ரோஹித ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

விசாரணை நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை அறிக்கையை வழங்குமாறு சம்பத் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்