மட்டு நகர் உணவகத்தின் சமயலறைக்குள் நாய்: வர்த்தகருக்கு அபராதம்

மட்டு நகர் உணவகத்தின் சமயலறைக்குள் நாய்; வர்த்தகருக்கு அபராதம்

மட்டு நகர் சமயலறைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை வளர்ப்பு நாயை வைத்துக்கொண்டு சமயல் மேற்கொண்டமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமயலறைக்குள் நாய் இருந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.கிசாந்தராஜிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

” சுகாதார வைத்திய அதிகாரி மாதவன் தலைமையில் பொது மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய மட்டக்களப்பு மாணகர சபைக்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோனைகளின்போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவ் வர்த்தகருக்கு எதிராக நேற்றைய தினம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அதன் போது அவருக்கு ரூபா 20000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்