வாகன விபத்து ஒருவர் பலி
வாகன விபத்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியும் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
63 வயதுடைய நபர் ஒருவர் நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்