
சட்டவிரோதமானக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது
சட்டவிரோதமானக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு படகு வழியாக குறித்த 6 பேரும் தப்பி செல்ல முயன்ற போது தமிழ் நாட்டில் உள்ள கியூ பிரிவின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் படகு உரிமையாளரிடம் குறித்த சந்தேக நபர்கள்பணம் செலுத்தி படகு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
