மகனை சவரக்கத்தியால் வெட்டிய தந்தை

-பதுளை நிருபர்-

பசறை – கோணகலை பகுதியில் தந்தை ஒருவர் தமது மகனை சவரக்கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் கைது.

58 வயதுடைய தந்தை ஒருவரே 28 வயதுடைய தனது மகனை குடும்பத்தகராறு காரணமாக சவரக்கத்தியால் வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தகவல் கிடைத்துள்ளது.

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் மனைவியை தாக்க முற்பட்டபோது இடை நடுவே பாய்ந்த 28வயதுடைய மகன் தாயை தனது தகப்பனின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்டபோது மகன் தகப்பன் கையில் இருந்த சவரகத்தியால் சராசரியாக தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்

பசறை வைத்தியசாலையில் இடது கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் மகன் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்