
தந்தை தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சி
தந்தை தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சி
கம்பளை – நெத்தபிட்டிய பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சியத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை தனது 4 வயது மகள், 7 மற்றும் 14 வயது மகன்களுக்கு விஷம் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
