இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

விசேட பண்ட வரி இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மீது விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வரி 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படுமென நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வரியானது, நேற்று புதன்கிழமை முதல் ஆறு மாதங்களுக்கு அமுலாகும் வகையில் விதிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்