கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலையை இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ப்றீமா மட்டும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.