வாள்வெட்டினை மேற்கொண்ட கும்பல் கைது
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற நால்வர் அடங்கிய குழு கைதசெய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்