இந்திய விமானப்படையின் முதல் பெண் தளபதி
முதன் முறையாக இந்தியாவில் சீட்டா (Cheetah) மற்றும் சேடக்(Chetak) ஹெலிகாப்டர்களில் 2,800 மணிநேரத்திற்கும் மேலாக பறந்து குரூப் கேப்டன் பதவி வரை உயர்ந்துள்ளார் பெண்ணொருவர்.
இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவின் தளபதி பொறுப்பை ஏற்கும் முதல் பெண் அதிகாரி என்றபெருமைணை ஷாலிசா தாமி பெற்றுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் தாமிஇ மேற்கு இந்திய செக்டரின் போர்ப் படைப்பிரிவின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் , பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும்இ லூதியானாவில் உள்ள பெண்களுக்கான கல்சா கல்லூரியில் உயர் படிப்பையும் முடித்துள்ளார். அதன் பின்னர் 2003ம் ஆண்டு ஹெலிகாப்டர் பைலட்டாக IAF இல் தனது பயணத்தைத் தொடங்கினார்.
IAFல் ஒரு குழு கேப்டன் இராணுவத்தில் ஒரு கர்னலுக்கு சமமானவர். ஆண்களை போலவே பெண்களுக்கும் நிரந்தர கமிஷன் பதவிகள் மற்றும் கமாண்ட் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து சீட்டா (Cheetah) மற்றும் சேடக்(Chetak) ஹெலிகாப்டர்களில் 2,800 மணிநேரத்திற்கும் மேலாக பறந்து குரூப் கேப்டன் பதவி வரை உயர்ந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாமி, மார்ச் 27ம் திகதி பஞ்சாபில் தரையிலிருந்து வான் நோக்கி பாயும் ஏவுகணைப் படையின்(surface-to-air missile squadron) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இதற்கு முன்பாக, அவர் மேற்குபகுதி படை பிரிவில் ஹெலிகாப்டர் பிரிவின் விமானத் தளபதியாகவும் பணியாற்றினார்.
இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் கேப்டன் ஷிவா சவுகான், சியாச்சினில் உள்ள உலகின் மிக உயரமான போர்க்களத்தில் செயல்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு IAF இன் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்திய விமான படையில் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது, பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மகளிர் தினத்தில் ஷாலிசா தாமியின் பதவி உயர்வ ஒரு சிறப்பான பதிவு.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்