அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ

 

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் 33 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 10 காட்டுத் தீ சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள்  நேற்று செவ்வாய்க்கிழமை  தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அதிக தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் அந்த பகுதியில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந் நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டுத் தீ ஏற்பட்டுள்ள சில பகுதிகளில் 10 முதல் 15 மீற்றர் உயரத்திற்கு தீச்சுவாலைகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.இதுவரையில் 33 கட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 10 காட்டுத் தீ சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்